முன்னால் சென்ற பைக் மீது மோதிய கார் பாதிரியார் மீது வழக்கு

68பார்த்தது
முன்னால் சென்ற பைக் மீது மோதிய கார் பாதிரியார் மீது வழக்கு
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (45). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிந்து (38). சம்பவ தினம் கோபால் தனக்கு சொந்தமான பைக்கில் மனைவியுடன் புதுக்கடை - வெட்டு மணி சாலையில் சென்று கொண்டிருந்தார். காப்புக்காடு பகுதியில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளி அருகே செல்லும் போது,   பின்னால் வேகமாக சென்று கொண்டிருந்த  கார் ஒன்று பைக்கின் பின் பகுதியில் மோதி தள்ளியது. இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிந்து படுகாயமடைந்தார்.  

     அக்கம் பக்கத்தினர் மீட்டு பிந்துவை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியல் சிகிட்சைக்கு சேர்த்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் காரை ஓட்டிய தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த சர்ச் பாதிரியார் அனிஷ்ராஜ் (35) என்பவர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி