புதுக்கடை: மூதாட்டி மீது பைக் மோதல்

4141பார்த்தது
புதுக்கடை: மூதாட்டி மீது பைக் மோதல்
புதுக்கடை அருகே கீழ்குளம் செந்தறை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் மனைவி தங்கம் (70). இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுவிட்டு, தேங்காபட்டணம் - கருங்கல் சாலையில் வீட்டுக்கு  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு  பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த பைக் ஒன்று மூதாட்டி தங்கத்தின் மீது மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை மார்த்தாண்டம் அருகே காஞ்சிர கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர்.  இது தொடர்பான புகாரின் பேரில் பைக்கை ஓட்டிய கீழ்குளம் பகுதி சந்திரதாஸ் (40) என்பவர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் சந்திரதாஸ் விசாகபட்டினத்தில் இராணுவத்தில் பணிபுரிபவர் என தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி