குமரி அரசு பள்ளிகளில் 93. 47 சதவீதம் தேர்ச்சி

674பார்த்தது
குமரி அரசு பள்ளிகளில் 93. 47 சதவீதம் தேர்ச்சி
குமரி மாவட்டத்தில் 131 அரசு பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 190 மாணவ-மாணவிகள் எஸ். எஸ். எல். சி. தேர்வு எழுதினார்கள்.
இதில் 5 ஆயிரத்து 786 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 93. 47 சதவீதமாகும்.

மாணவர்களை பொறுத்தமட்டில் 3 ஆயிரத்து 234 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 912 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 90. 04 சதவீதம் ஆகும்.

மாணவிகள் 2 ஆயிரத்து 956 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 874 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 97. 23 சதவீதமாகும்.

அரசு பள்ளிகளிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழக அளவில் அரசு பள்ளிகள் தேர்ச்சி விழுக்காட்டில் குமரி மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி