மோட்டார் சைக்கிளை பறித்த போலீசார் வீடு திரும்பாத +2 மாணவர்

67பார்த்தது
மோட்டார் சைக்கிளை பறித்த போலீசார் வீடு திரும்பாத +2 மாணவர்
அருமனை உள்ள களியல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் ஒரு மாணவருக்கு பிறந்த நாள் கொண்டாட சக மாணவர்கள் 15 பேர் மோட்டார் சைக்கிள்களில் அரக நாடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றனர். அங்கு பிறந்த நாள் கொண்டாட்டம் இரவு வரை தொடர்ந்தது.
      இதை கண்ட பகுதி மக்கள் கடையாலுமூடு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்றதும் மாணவர்கள் தங்களது பைக்குகளில் தப்பி சென்று விட்டனர்.
      இதில் அருமனை பகுதியை சேர்ந்த ஒரு மாணவர் பைக்குடன் பிடிபட்டார். அதில் இந்த மாணவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாதது தெரிய வந்தது. போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துவிட்டு மறுநாள் பெற்றோருடன் வந்து வாங்கி செல்லுமாறு கூறியுள்ளனர்.

     மோட்டார் சைக்கிள் இல்லாமல் வீட்டிற்கு செல்ல பயந்த மாணவர் அன்று வீட்டிற்கு செல்லவில்லை. இதற்கு இடையே போலீசார் மாணவரின் தந்தையை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.
     இந்த நிலையில் நேற்று காலையில் வீடு சென்ற மாணவரிடம் பெற்றோர் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.

     இதை அடுத்து மாணவனுக்கு பெற்றோர் அறிவுரை கூறியதுடன்,   போலீசார் மாணவரின் தந்தையிடம் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி