கொல்லங்கோட்டில் 1400 லிட்டர்மண்ணெண்ணெய் காருடன்  சிக்கியது

81பார்த்தது
கொல்லங்கோட்டில் 1400 லிட்டர்மண்ணெண்ணெய் காருடன்  சிக்கியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஃபைபர் படங்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் உள்ளது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கும்  போலீசாருக்கும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

     இந்த நிலையில் நேற்று கொல்லங்கோடு தனிப்பிரிவு போலீசாருக்கு காக்கவிளை  என்ற பகுதியில் ஒரு தென்னை தோப்பில் மண்ணெண்ணெயுடன் சொகுசு கார் நிறுத்தியுள்ளாக தகவல் கிடைத்தது.

      உடனடி அங்கு  சென்ற போலீசார் காரை சோதனையிட்டபோது மண்ணெண்ணெய் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீஸ் உதவியுடன் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து சோதனை செய்தபோது, அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 கேன்களில் 1400 லிட்டர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதை அடுத்து சொகுசு கார் மற்றும் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து நாகர்கோவில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசிடம் ஒப்படைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி