கன்னியாகுமரியில் புகையிலை பொருட்களை விற்ற வாலிபர் கைது.

65பார்த்தது
கன்னியாகுமரி-கோவளம் சாலையில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்ததாக நாச்சியார் குடியிருப்பைப் சேர்ந்த சுஜித் (வயது21) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி