குமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவிய 25வது ஆண்டு வெள்ளி விழா வருகிற டிச. 30 மற்றும் 31 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி குமரி திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் இன்று (டிச. 26) கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கரகாட்டம் தப்பாட்டம் நையாண்டி மேளம் மற்றும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.