கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.

81பார்த்தது
தொழில்நுட்ப உபகரணங்கள் இன்றியும், மதிப்பூதியம் ஏது மின்றியும் முழுமையான வடிவம் பெறாமல் இருக்கும் டிஜிட்டல் கிராப் சர்வே செயலி மூலமாக கிராப்பதிவு செய்யகிராமநிர்வாக அலுவலர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதலை வர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேஸ்வர காந்த் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் ஈஸ்வரி, தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க குமரி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பீட்டர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி