கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில் மாசி பெருந்திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து அம்பாளின் ஆசி பெற்றனர். முன்னதாக எம்எல்ஏ எம். ஆர். காந்தி, மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.