குமரியில் துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

0பார்த்தது
குமரியில் துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
குமரி மாவட்டத்தில் வருவாய் துறை துணை தாசில்தார்கள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவட்டார் துணை தாசில்தார் அருள்லிங்கம் கிள்ளியூர் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், கல்குளம் மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் திருவட்டார் மண்டல துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக எம் பிரிவு தலைமை உதவியாளர் சரஸ்வதி மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.