அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று (டிச. 27) வந்து குவிந்தனர்.
அவர்கள் கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து நினைவகங்களை பார்த்து சென்றனர்.