விடுமுறை தினத்தன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இன்று (டிச. 22) விடுமுறை தினத்தை ஒட்டி அதிகாலையிலேயே கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் உதயம் காட்சியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர். காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டனர்.