இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினன் என்பதால் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதிகாலை முதலே வருகை தந்த மக்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயம் காட்சியை நேரில் கண்டு களித்தனர். மேலும் பலர் செல்பி எடுத்துக் கொண்டனர். இதனையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.