சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். கடற்கரையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக பல மணி நேரமாக காத்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கருமேக கூட்டங்களால் சூரியன் உதிப்பது தெரியாத நிலையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.