கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, காளிகேசம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் காளிகேசம் செல்லும் ஒத்தக்கடை சப்பாத்து பாலத்தின் மீது வெள்ளம்பாய்ந்து செல்கிறது. சுற்றுலா பயணிகள் ஆபத்தில் சிக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நேற்று மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின்பேரில் காளிகேசத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்று சப்பாத்தில் செல்வது குறைந்தால் காளிகேசம் செல்ல அனுமதிக்கப்படும் வனச்சரகர் தெரிவித்தார்.