கன்னியாகுமரி மாவட்டம் கீழகிருஷ்ணன்புதூர் பகுதியில் உள்ள கடையில் புகையிலை விற்பனை செய்யப்படுவதாக சுசீந்திரம் போலீசாருக்கு நேற்று(அக்.1) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 பாக்கெட் புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளரான கீழ கிருஷ்ணன்புதூர் அருகே உள்ள ராமன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரை (வயது 48) என்பவரை கைது செய்தனர்.