சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மூன்று புதிய படகுகள் வாங்கப்படும் என முதல்வர் நேற்று (டிசம்பர் 31) நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்தார். முதல் படகுக்கு காமராஜர் பெயரும், இரண்டாவது படகுக்கு மார்ஷல் நேசமணியின் பெயரும், மூன்றாவது படகுக்கு திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு. போப் ஆகியோரின் பெயரும் சூட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.