கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை தென் மாவட்டங்களில் மிகப்பெரிய மலர் சந்தை. கேரளா வியாபாரிகள் ஓணம் பண்டிகையை ஒட்டி தோவாளை மலர் சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்வது வழக்கம். வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஓண கொண்டாட்டம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மலர்கள் வாங்குவதற்காக கேரளா வியாபாரிகள் வரத்து தோவாளை மலர் சந்தைக்கு குறைவாக இருந்தது.