கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகில் புது குடியிருப்பு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 10 நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காவடி பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் வண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுழலும் சக்கரத்தில் தொங்கும் காவடியில் சென்றது பார்ப்பவர்களை பரவசம் அடைய செய்தது.