தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளான இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி திருவள்ளுவர் சிலையில் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் 102 நபர்களுக்கு திருவள்ளுவர் சிலையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.