கீரிப்பாறை பகுதியில் சேதமடைந்த சாலையை பார்வையிட்ட ஆட்சியர்

81பார்த்தது
கீரிப்பாறை பகுதியில் சேதமடைந்த சாலையை பார்வையிட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியில் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை அதிகாரிகளுடன் பார்வையிட்ட அவர் சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அவருடன் அதிகாரிகளும் வனத்துறையினரும் சென்றனர்.

தொடர்புடைய செய்தி