கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டது. இந்த கண்ணாடி கூண்டு பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(டிச. 30) கூண்டு பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.