மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி. ஐ. எஸ். எப். ) சார்பில் இந்திய கடல் வளம் பாதுகாக்க வேண்டி மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகிய 2 இடங்களில் இருந்து கடந்த 7-ஆம் தேதி 125 வீரர்களின் சைக்கிள் பேரணி தொடங்கியது. இது, 11 மாநிலங்கள் வழியாக 6, 553 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து நேற்று குமரியில் நிறைவடைந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.