கன்னியாகுமரி காந்தி மண்டப வளாகத்தில் காமராஜரும் மகாத்மா காந்தியும் அமர்ந்து பேசும் வகையில் சிலை வடிவமைத்து பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த சிலையை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டு ரசித்துச் செல்கின்றனர். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.