கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபகாலமாக இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் நபர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று எச்சரித்துள்ளார்.