மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் தோவாளை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய தலைவர் கோலப்பன் தலைமையில் நேற்று விளங்காடு, அழகிய பாண்டியபுரம், தெள்ளாந்தி உள்ளிட்ட பகுதிகளில் மும்மொழிக் கொள்கை குறித்து பொதுமக்களுடன் எடுத்துக் கூறி கையெழுத்து இயக்கம் நடத்தினர்.