கன்னியாகுமரி மாவட்டம் நல்லூர் - இரவிபுதூர் சாலையில் இன்று(மார்ச் 15) தனியார் பள்ளி வாகனம் ஒன்று, அப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள ஓடையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. 3 மாணவர்கள் லேசான காயம், ஆசிரியை ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மற்றொரு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.