மழை காரணமாக குமரியில் உப்புத்தொழில் பாதிப்பு.

73பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி உள்ள நிலையில் உப்புத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் புத்தளம், சாமிதோப்பு, கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் உப்புத் தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக உப்புத்தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு உற்பத்தியும் தடைப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி