கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் நகை கடையில் 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளையர்கள் தங்களது தடயங்களை முழுவதுமாக அழித்த நிலையில் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பின்னரே கொள்ளையர்கள் சிக்கியதாக நேற்று எஸ். பி தெரிவித்தார்.