கண்ணாடி நடை பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல கட்டுப்பாடு.

61பார்த்தது
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அதிகாலையில் சூரிய உதயும் காண கடற்கரையில் திரண்டிருந்தனர். ஆனால் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகு மூலம் கடலின் நடவே உள்ள விவேகானந்தர் மண்டபம் சென்று அங்கிருந்து கண்ணாடி நடை பாலம் மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று திரும்பினர். கன்னியாகுமரி நேற்று காலையில் மழை பெய்ததால் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி நடை பாலத்தில் சுமார் 2 மணி நேரம் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பாலத்தின் மழைநீர் தேங்கியதால் அதனை ஊழியர்கள் சுத்தம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதிக் கப்பட்டனர். மேலும் பாலத்தின் ஒரு பகுதியில் பராமரிப்பு பணிகள் மற்றும் சிலிக்கான் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா பணிகள் குறிப்பிட்ட பகுதி வழியாக கட்டுப்பாடுடன் அனுமதிக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி