கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் பீம நகரி ஊராட்சி மன்ற தலைவி சஜிதா சுப்பிரமணியம் தலைமையில் இன்று (அக். 2) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பீமநகரி ஊராட்சியை நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு கிராமசபை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய் சுந்தரம், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி மற்றும் ஏரளாமான ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.