கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் திட்ட பணிகளுக்கு கமிஷன் பெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், பேரூராட்சி தலைவி சத்யவதியின் கணவர் பாலசுந்தரம் என்பவர் துணைத்தலைவர் பால்தங்கம்மீது சமூக வலைதளங்களில் அவதுறாகவும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் பதிவுகள் பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பால்தங்கம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் நேற்று (செப்.,11) புகார் அளித்தார்.