கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் நேற்று பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் செயல் அலுவலர் ரமாதேவி முன்னிலையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் பூலோக ராஜா, இக்பால், ராயப்பன், சகாய சர்ஜனல் பிரைட்டன், வினிதா, மெர்லின் ஆகிய 6 கவுன்சிலர்கள் செயல் அலுவலரை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.