கடல் சீற்றங்களின் போது பொதுமக்களை மீட்கும் பயிற்சி ஜூலை-8 அன்று கன்னியாகுமரி கடற்கரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தொடங்கி வைத்தார். பயிற்சியின் இறுதி நாள் நிகழ்ச்சியான நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பயிற்சி பெற்றவர்கள் செயல்முறையாக செய்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர்களுக்கு கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்.