தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குமரி மாவட்ட கிளை சார்பில் (ஜூலை 3) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர். நாகராஜன் முன்னிலை வகித்தார்.
மாவட்டத் தலைவர் டயஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையில் 2025–26 கல்வி ஆண்டில் போடப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும், இந்த கல்வி ஆண்டில் ஓய்வு பெற உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும். நிர்வாக மாறுதல் ஆணைகளின் மீது விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கை விரைந்து முடித்து ஆசிரியர் பொது மாறுதலை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் பாலச்சந்திரன், மகேஷ், சசிகுமார் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.