குமரி - களியக்காவிளை இடையே நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி பொத்தையடி பகுதியில் சாலை அமைப்பதற்கு மண் கொட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று வழுக்கம்பாறையில் பாலம் அமைக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டுக்குள் இந்த சாலை பணியை முடிக்கும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.