கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சியில் பொங்கல் விழா இன்று (ஜன.11) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். ஊராட்சி மன்றத் தலைவர் நீலகண்ட ஜெகதீஷ் இந்த விழாவில் கலந்துகொண்டார். பொங்கல் பானையில் அரிசி போட்டு பொங்கல் விழாவைத் தொடங்கிவைத்தார். விழாவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.