கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பேரூராட்சி 15 ஆவது வார்டுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் நாகர்கோவில் குளச்சல் மேற்கு கடற்கரை சாலையை இணைக்கும் தார்சாலை மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுவதாக கூறி வெள்ளிமலை பேருராட்சி 15 ஆவது வார்டு உறுப்பினர் தங்கம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (செப். 30) மனு அளித்தனர்.