கன்னியாகுமரியில் பெரியார் நகர் பெயர்ப் பலகை நீண்டகாலமாக இல்லாமல் இருந்தது. அங்கு பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என்று குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் வெற்றி வேந்தன் ஆகியோர் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சி உதவி இயக்குனரகத்திற்கு சென்று உதவி இயக்குநர் மற்றும் உதவி பொறியாளரை மாவட்டச் செயலாளர் வெற்றி வேந்தன் கேட்டுக்கொண்டார். பேரூராட்சி மன்ற தலைவர் குமரி எ
ஸ்டீபன், வார்டு உறுப்பினர். பூலோக ராஜன் முயற்சியில் பெயர்ப்பலகை புதுப்பிக்கப்பட்டது.