ஆரல்வாய்மொழி அருகே ரெயில் தண்டவாளத்தில் மூதாட்டி பிணம்.

1108பார்த்தது
ஆரல்வாய்மொழி அருகே ரெயில் தண்டவாளத்தில் மூதாட்டி பிணம்.
ஆரல்வாய்மொழி - தோவாளை ரெயில் நிலையத்துக்கு பண்டாரபுரம் ரெயில் தண்டவாளத்தில் இடையே நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் படுகாயங்களுடன் கிடந்தது. இதைப் பார்த்த அந்த பகுதி நாகர்கோவில் மக்கள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிணமாக கிடந்த மூதாட்டி யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் கிளி பச்சை கலரில் ஊதா நிற பூ போட்ட சேலை அணிந்திருந்தார். அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி பலியானாரா அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து சரிவர தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் ,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி