கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஆண்டிதோப்பு என்ற இடத்தில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் கிஷோர் சரவணா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராஜா என்பவர் எந்தவித அனுமதியின்றி டெம்போவில் 4 யூனிட் கனிம வளம் கொண்டு வந்ததை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அதன் பேரில் பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.