கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே கோட்டவிளையைச் சேர்ந்தவர் ஜெயசு குமார், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பா (வயது33). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கொத்தனாரான மதிவாணன் (29) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு ஒன்று அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் பதியப் பட்டு கோர்ட்டில் உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று பாப்பா தனது தாயாருக்கு சாப்பாடு கொண்டு செல்ல சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதிவாணன் அவரை வழிமறித்து அந்த வழக்கை வாபஸ் பெறக்கூறி கன்னத்தில் தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென் றார். இதுகுறித்து பாப்பா அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மதிவாணன் மீது சப்- இன்ஸ்பெக்டர் லிபி பால் ராஜ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.