கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோயில் மாசி திருக்கல்யாண திருவிழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பஞ்ச வாத்தியங்கள் முழங்க அருள்மிகு தாணுமாலய சுவாமி காமதேனு வாகனத்திலும் மயில் வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் கருட வாகனத்தில் பெருமாளும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.