கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் பரமேஷ். கல்குவாரி மேலாளர். இவரது மனைவியின் தங்கை ஜனனியை விஜய் சாரதி காதலித்தது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், பரமேசை விஜய் சாரதி ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி மிரட்டி, அவரது பையில் இருந்த 300 ரூபாயை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தென்தாமரை குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் சாரதியை நேற்று கைது செய்தனர்.