கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் ராஜாவூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் வெள்ளை நிற வேட்டியும், சிமெண்ட் கலர்சபாரிசட்டையும்
அணிந்திருந்தார். ஆனால் அவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. பின்னர் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.