கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் வைகாசி மாத பௌர்ணமி தினத்தில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆராத்தி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் மற்றும் பாஜக மாநில தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.