கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு வரும் பக்தர்களுக்கு ஆங்கில மாதம் முதல் சனிக்கிழமை அன்று திருப்பதி லட்டு ரூ. 50-க்கு பிரசாதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் இருந்து 5 ஆயிரம் லட்டுகள் கன்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புரட்டாசி மாதம் திருப்பதியில் பிரமோற்சவ திருவிழா தொடங்கியுள்ளதால் இந்த மாதமுதல் சனிக்கிழமையான இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு லட்டு வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் சனிக்கிழமை தோறும் திருப்பதி லட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.