கடந்த இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பிறகு 2024-25 ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் இன்று (ஜூன் 10) திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்று தங்களது பள்ளி தோழர்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் SMRV தொடக்க பள்ளியில் இன்று வருகை தந்த மாணவ, மாணவியர்களை 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுனில், மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.