வெள்ளமடம் அருகே கையுறை தயார் செய்யும் தனியார் கம்பெனி உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கிறார்கள். கையுறைகள் சேமித்து வைக்கும் குடோன் பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமள என எரிந்தது. இது பற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. தீயணைப்பு நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். தீ விபத்தில் அப்பகுதி முழு வதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
தீயில் கருகி பல லட்சம் மதிப்புள்ள கையுறைகள் சாம்பல் ஆயின. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.