குமரி: டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி இன்று நடக்கிறது.

67பார்த்தது
குமரி: டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி இன்று நடக்கிறது.
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் தொடர்பான பணிகளுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி பதிவு பெற்ற டாக்டர்களிடம் இருந்து மருத்துவச் சான்று பெற வேண்டும். டாக்டர்கள் தாங்களே மென்பொருளில் உள்ளீடு செய்து விண்ணப்பதாரரின் மருத்துவ சான்றிதழ் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இணைய வழியில் பதிவு செய்யப் பட்ட விண்ணப்பதாரரின் மருத்துவ சான்று மட்டுமே பரிசீலிக்கப்படும். இணையம் அல்லாத வழியில் வழங்கிய மருத்துவ சான்றிதழ் ஏற்றுக்கொள்ள மென்பொருளில் வழியில்லை. எனவே மருத்துவ சான்று வழங்கும் டாக்டர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தகவல் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகிற 13-ந்தேதி முதல் வட்டார போக்கு அலுவலகத்தில் இந்த முறை நடை முறைப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி